3, 12, 21, 30-ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்?

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்தைக் கொண்ட வர்கள். குருவை ஆங்கிலத்தில் "ஜூப்பிட்டர்' என்று கூறுவார்கள்.

Advertisment

அதனால் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு கடவுள்களின் அருள் இருக்கும். அறிவு இருக்கும். படிப்பு இருக்கும்.

சிலர் சுய முயற்சியால் பலவகைப்பட்ட அறிவுகளையும் அனுபவங் களையும் பெறுவார்கள்.

குருவின் வடிவத்தில் யாராவது வந்து இவர்களுக்கு பல விஷயங் களையும் கற்றுத் தருவார்கள்.

Advertisment

இந்த தேதிகளில் பிறந்தவர்களில் பலர் ஆசிரியர்களாக இருப்பார்கள். சிலர் நிர்வாகிகளாக இருப்பார்கள்.

சிலர் அரசாங்கத்தில் பெரிய பதவிகளில் இருப்பார்கள். அதன் மூலம் மக்களுக்குத் தொண்டு செய்வார்கள்.

வீட்டிலிருக்கும் அனைவருக்கும் நல்லவற்றைச் செய்ய வேண்டுமென நினைப்பார்கள். சமூகத்தைச் சீரமைக்கும் குணம் இருக்கும்.

இந்த தேதிகளில் பிறந்த பலர் தொழிலதிபர்களாக இருப்பார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நேர்மை குணம் உள்ளவர்களாக இருப்பார்கள். நன்றாக வாழ வேண்டுமென நினைப்பார்கள்.

யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது என நினைப்பார்கள். தங்களுக்கென சில கொள்கைகளை வகுத்துக்கொண்டு, அதன் படி வாழ வேண்டுமென நினைப்பார்கள்.

இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். இந்த நான்கு தேதிகளிலும் பிறந்தவர்கள் நல்ல உயரத்தைக் கொண்டிருப்பார்கள். ஒல்லியாகவும் இல்லாமல், பருமனாகவும் இல்லாமல், நடுத்தர உடலமைப்புடன் இருப்பார்கள். பிரகாசமான தோற்றத்துடன் இருப்பார்கள்.

வயதாகும் காலத்தில், தலையில் வழுக்கை இருக்கும். சிலருக்கு இளம் வயதிலேயே தலைமுடி உதிரும்.

இந்த தேதிகளில் பிறந்தவர்களை எளிதில் யாராலும் புரிந்து கொள்ளமுடியாது. இவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப் பார்கள்.

இவர்களுக்கு விரோதமான எண்கள்: 6, 8

பொருத்தமற்ற தேதிகள்: 6, 15, 24

அதிர்ஷ்ட எண்கள்: 3, 1

அதிர்ஷ்ட தேதிகள் : 3, 12, 21, 30, 9, 18, 27, 1, 10, 19

ராசியான கல் : புஷ்பராகம்

பொருத்தமற்ற நிறம்: கருப்பு, பச்சைபெயர் வைக்கும்போது, 1, 3, 9-ல் வருவதைப்போல பெயர் வைக்கவேண்டும்.

இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய நோய்கள்: உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். ரத்த அழுத்தம் இருக்கும். கண்ணில் நோய் இருக்கும். அதிகமாக சாப்பிடுவதால், சிலருக்கு தொப்பை விழும்.

இந்த தேதிகளில் பிறந்தவர்களில் பலர் மெட்டல் துறையில் இருப்பார்கள். சிலர் ஜெம் (ஞ்ங்ம்) வர்த்தகத்தில் இருப்பார்கள். சிலர்  ம்ண்ய்ங்ழ்ஹப்,ச்ண்ழ்ங் ற்ர்ர்ப்ள்,ஜ்ர்ர்க்ள்  ஆகிய வர்த்தகத்தில் இருப்பார்கள்.

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்களுடைய பெயரை 45 என்று வருவதைப்போல அமைத்துக்கொண்டால், வாழ்க்கையில் நிறைய வெற்றிகளைக் காணலாம்.